புதிய தலைமைச் செயலாளர்
புதிய தலைமைச் செயலாளர்முகநூல்

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளர் யார்?

ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய தலைமை செயலாளர் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
Published on

ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் புதிய தலைமை செயலாளர் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவரான ஐஏஎஸ் அதிகாரி ஞானதேசிகனின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது.

தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா
தலைமை செயலர் சிவ்தாஸ் மீனாபுதிய தலைமுறை

ஆணையத்தின் அடுத்த தலைவரை தேர்வு செய்ய, தேர்வுக்குழு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்த நிலையில், பல்வேறுகட்ட பரிசீலனைகளுக்குப் பிறகு, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா, எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமைச் செயலாளர்
”இதற்கு ராஜ்நாத் சிங்கே பொருத்தமானவர்” - கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com