’நாங்கள்தான் அதிமுக!’ - ஆலோசனை கூட்டத்தில் நடந்த கலாட்டா.. தேர்தல் அதிகாரி சொன்ன பதில்!

’நாங்கள்தான் அதிமுக!’ - ஆலோசனை கூட்டத்தில் நடந்த கலாட்டா.. தேர்தல் அதிகாரி சொன்ன பதில்!
’நாங்கள்தான் அதிமுக!’ - ஆலோசனை கூட்டத்தில் நடந்த கலாட்டா.. தேர்தல் அதிகாரி சொன்ன பதில்!

அதிமுக கட்சியின் தலைமை யார் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண் இணைக்க கூடிய நடவடிக்கை தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று காலை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 11 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதிமுக சார்பாக இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் பங்கேற்றனர். இதில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் கூட்டம் தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே கூட்ட அரங்கிற்கு வந்திருந்தார்.

அதேபோல் ஈ.பி.எஸ் அணி சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் வந்திருந்தனர். இதில் இரு அணியினருக்கும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் அதிமுக என்று இருந்த பெயர் பலகை கோவை செல்வராஜ் அருகில் இருந்ததை ஜெயக்குமார் எடுத்து தனக்கு அருகில் வைத்துக் கொண்டார். இதனால் இரு தரப்பினருக்குமான உட்கட்சி பிரச்னை இன்றைய கூட்டத்திலும் வெளிபட்டது.

இந்த கூட்டத்தில் ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணியிடம் தனித் தனியாக கருத்துக்கள் கேட்கப்பட்டாலும் அது அதிமுக கருத்து தான் என்கின்றனர். அதேபோல் ஓ.பி.எஸ் அணி சார்பாக பங்கேற்ற கோவை செல்வராஜ் எந்த கட்சி என்றே தெரியாது என ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.

இந்தக் கூட்டத்தில் எந்த அடிப்படையில் இரு அணியினரை அழைத்தீர்கள் என காங்கிரஸ் பிரதிநிதி நவாஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு விளக்கம் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கட்சியின் தலைமை யார் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com