Actor Vijay
Actor Vijaypt desk

தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு இரு கண்கள் - கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு

படப்பிடிப்பிற்காக கேரளா சென்றுள்ள நடிகர் விஜய், தமிழ்நாடும், கேரளாவும் எனக்கு இரு கண்கள் மாதிரி என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
Published on

செய்தியாளர்: சுமன்

படப்பிடிப்பிற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலைத்திற்கு கடந்த 18 ஆம் தேதி வந்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து GOAT படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள முக்கிய இடங்களில் நடந்து வருகிறது.

Vijay selfie
Vijay selfiept desk

இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தின் அருகே குவிந்திருந்த ரசிகர்களை சந்திக்க முடிவு செய்த நடிகர் விஜய், வாகனத்தின் மீது ஏறி ரசிகர்கள் மத்தியில் பேசினார். அப்போது, தமிழ்நாடும் சரி, கேரளாவும் சரி எனக்கு இரு கண்கள் மாதிரி எனவும், உங்க வீட்டுப் பிள்ளையாக பார்த்தீங்க பாருங்க, அது உண்மையிலேயே எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருங்குதுக்க,

அப்படியே உங்க மனசில் வாழ்ந்திடணும்னு ஆசையா இருக்குதுங்க என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார். பின்னர் Mobile phone-ல் செல்ஃபி வீடியோ எடுத்த விஜய், வரும் வழியில் ஒரு குழந்தையை கொஞ்சினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com