தாஜ்மகாலை மிஞ்சிய மாமல்லபுரம்! - இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

தாஜ்மகாலை மிஞ்சிய மாமல்லபுரம்! - இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை
தாஜ்மகாலை மிஞ்சிய மாமல்லபுரம்! - இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக வகைப்படுத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மாமல்லபுரம் சுற்றுலா தளத்தை காண வந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையானது, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை காண வந்த வெளிநாட்டுப் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெளியிட்ட இந்திய சுற்றுலாப் புள்ளிவிவரம் 2022 தெரிவித்துள்ளது.

இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2021-22 ஆம் ஆண்டில் சென்னையில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள மாமல்லபுரத்திற்கு 1,44,984 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வந்துள்ளனர். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை காண 38,922 வெளிநாட்டுப் பார்வையாளர் வந்துள்ளனர்.

மேலும் ஆக்ரா கோட்டையை காண 13,598 வெளிநாட்டுப் பார்வையாளர்களும் மற்றும் டெல்லியில் உள்ள குதுப் மினாரை காண 8,456 வெளிநாட்டுப் பார்வையாளர்களும் மற்றும் டெல்லி செங்கோட்டையை காண 5,579 பார்வையாளர்களும் வந்துள்ளனர்.

கடந்த வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகம் பெற்ற முதல் ஐந்து மாநிலங்கள் தமிழ்நாடு (115.33 மில்லியன்), உத்திரப் பிரதேசம் (109.70 மில்லியன்), ஆந்திரப் பிரதேசம் (93.27 மில்லியன்), கர்நாடகா (81.33 மில்லியன்) மற்றும் மகாராஷ்டிரா (43.56 மில்லியன்)

மத்திய அரசின் பட்டியலில் உள்ள முதல் 10 நினைவுச் சின்னங்களில் ஆறு சின்னங்களில் தமிழகத்தில் தான் உள்ளன. அவை செங்கல்பட்டு மாவட்டத்தில் கடலோரக் கிராமத்தில் சாளுவன்குப்பத்தில் உள்ள புலித்தலை, பாறைக் கோயில். செஞ்சி மாவட்டத்திற்கு அருகிலுள்ள செஞ்சி கோட்டை. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள வட்டக்கோட்டை கோட்டை. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் கோட்டை மற்றும் சித்தன்னவாசல். கடந்த வருடம் இந்த ஐந்து மாநிலங்களின், மொத்த உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 65.41 சதவிகிதம் ’’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com