\
தமிழர் இறந்தது கேரளாவுக்கே அவமானம்: பினராயி விஜயன்

தமிழர் இறந்தது கேரளாவுக்கே அவமானம்: பினராயி விஜயன்

தமிழர் இறந்தது கேரளாவுக்கே அவமானம்: பினராயி விஜயன்
Published on

கேரளாவில் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்காததால் தமிழ‌ர் ஒருவர் மரணமடைந்த நிகழ்வு, கேரள மாநிலத்திற்கு நேர்ந்த அவமானம் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார். 

நெல்லையை சேர்ந்த முருகன், கடந்த ஞாயிறு அன்று விபத்தில் படுகாயமடைந்தார். 7 மருத்துவ‌மனைகள் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்தத்தால் அவர் உயிரிழந்தார். 

இந்நிலையில் கேரள மாநில சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசிய மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு கோரினார். முருகன் இறந்தது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவம் எதிர்காலத்தில் யாருக்கும் ஏற்படக்கூடாது. முருகனின் இறப்பிற்கு கேரள அரசு சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com