'தமிழ் சொந்தங்களே புனித வாவர் மசூதியை சர்ச்சை ஆக்காதீர்கள்' ராகுல் ஈஸ்வர்

'தமிழ் சொந்தங்களே புனித வாவர் மசூதியை சர்ச்சை ஆக்காதீர்கள்' ராகுல் ஈஸ்வர்
'தமிழ் சொந்தங்களே புனித வாவர் மசூதியை சர்ச்சை ஆக்காதீர்கள்' ராகுல் ஈஸ்வர்

தமிழ் சகோதர சகோதரிகளே புனித வாவர் மசூதிக்குள் நுழையும் போராட்டம் செய்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தாதீர்கள் என்று
ஐயப்ப தர்ம சேனா தலைவரும், திருவாங்கூர் தேவஸம் போர்டின் முன்னாள் செய்தி தொடர்பாளர் ராகுல் ஈஸ்வர் ட்விட்டரில்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம்
செப்டம்பர் 28 ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி மற்றும் பாஜக, இந்து அமைப்புகள் இடையே மோதல் நிலவி வருகிறது. ஜனவரி 2 ஆம் தேதி பிந்து, கனக துர்கா ஆகிய
இளம் பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்ததாக மாநில அரசு தெரிவித்தது. இதனால் கேரளா மேலும் கலவர
பூமியானது. கடையடைப்பு போராட்டம் காரணமாக தமிழக - கேரள எல்லையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. 

சபரிமலை ஐயப்ப யாத்திரையின் முக்கிய நிகழ்வாக இருப்பது வாவர் சாமி வழிபாடு. அதாவது முதல் முறையாக ஐயப்பனுக்கு
விரதமிருந்து மாலையிட்டு, சன்னிதானத்துக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் வாவர் சாமி மசூதிக்கு சென்றுவிட்டுதான் போக
வேண்டும் என்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் விதி. வாவர் - ஐயப்பன் ஆகியோர் நண்பர்கள் என புராண மற்றும்
வரலாற்று கதைகள் கூறுவதால், காலம்காலமாக ஐயப்ப பக்தர்கள் இதனை பின்பற்றுகிறார்கள். வாவர் மசூதி சபரிமலை
செல்லும் வழியில் எருமேலியில் அமைந்துள்ளது. இந்த மசூதியை ஒரு சுற்றுசுற்றி கையெடுத்து கும்பிட்டு வாவரை வேண்டி
பெரு வழிப் பாதையில் ஐயப்ப பக்தர்கள் தங்களது சபரிமலை பயணத்தை தொடங்குவார்கள்.

இந்த மசூதியில் பெண்களுக்கு அனுமதியில்லை இஸ்லாமிய மதக்கோட்பாட்டின்படி. ஆனால், சர்ச்சைக்குறிய சபரிமலை தீர்ப்பு
வந்ததால் வாவர் மசூதியிலும் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் கோரிக்கை விடுக்க
தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வாவர் மசூதிக்குள் சில தமிழகப் பெண்கள் நுழையத் திட்டமிட்டுள்ளதாக கேரள
காவல்துறைக்கு நேற்று  தகவல் கிடைத்தது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளா வரும் அனைத்துப் பயணிகளையும்
காவல்துறையினர் பரிசோதனை செய்தனர். இதையடுத்து வேலந்தாவளம் சோதனைச் சாவடியில் 6 இளம்பெண்களைக்
காவலர்கள் சோதனையிட்டனர். சோதனையில் அவர்கள் இந்து மக்கள் கட்சித் தொண்டர்கள் என்பதும் திருப்பூர் மற்றும்
திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இந்தப் பெண்கள் 3 ஆண்களுடன் வந்த அவர்கள், சபரிமலை சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்யப் பெண்களுக்கு விதிக்கப்பட்ட
தடை நீக்கப்பட்டதுபோல, வாவர் மசூதிக்குச் செல்லவும் தடை நீக்கப்பட வேண்டும் என்று கூறினர். விசாரித்த
காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.அவர்கள் வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்விவகாரம் ஐயப்ப
சாமியின் தர்மசாஸ்தா கோயில் இருக்கும் எருமேலியிலும், வாவர் மசூதியிலும் பெரும் பரபரப்பும் பதற்றமும் உண்டானது.
சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை இம்மாதம் 19 ஆம் தேதியுடன் சாத்தப்படுவதால் எந்தப் பிரச்னையும் இல்லாமல்
இந்தாண்டுக்கான மகர விளக்கு பூஜை நிறைவடைய வேண்டும் என்று கேரள அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்விவகாரம் குறித்து ஐயப்ப தர்ம சேனா தலைவரும், திருவாங்கூர் தேவஸம் போர்டின் முன்னாள் செய்தி தொடர்பாளர்
ராகுல் ஈஸ்வர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்து பதிவிட்டுள்ளார் " சுவாமி ஐயப்பனுக்காக உண்மையான பக்தர்களையும்
மனதில் கொண்டு புதின வாவர் மசூதியை மையமாக வைத்து புதிதாக எந்தவொரு சர்ச்சையும் ஏற்படுத்த வேண்டாம். வாவர்
மசூதி ஐயப்ப யாத்திரையின் புனித இடம். என்னுடைய தமிழ் சகோதர சகோதரிகளையும் கேட்டுக்கொள்வதும் இதுதான், வாவூர்
மசூதியை வைத்து பிரச்னை வேண்டாம். புதின ஐயப்ப யாத்திரையின் தொடக்க இடமே வாவர் மசூதிதான்" என
தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com