தமிழக வில்லுப்பாட்டு பாரம்பரியமானது - மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

தமிழக வில்லுப்பாட்டு பாரம்பரியமானது - மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்
தமிழக வில்லுப்பாட்டு பாரம்பரியமானது - மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி பெருமிதம்

வில்லுப்பாட்டு மூலம் கதை சொல்லும் தமிழகத்தின் பாரம்பரியம் சிறப்பானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம்  மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், கதை சொல்லுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். தமிழகத்தில் இசையுடன் கதை கூறும் வில்லுப்பாட்டு முறை மிகவும் பிரசித்தி பெற்றது என சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, தமிழில் வித்யா என்ற பெண் புராணங்களை கதைகளாக சொல்லி வருகிறார் என குறிப்பிட்டார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாரம் ஒரு நபர் வீதம் கதைகளை சொல்லி மகிழலாம் என யோசனை தெரிவித்த மோடி, நாட்டில் உள்ள ஒவ்வொரு கதை சொல்லியும், சுதந்திர போராட்டத்தில் இந்தியா சந்தித்த பிரச்னைகளை கதைகளாக எடுத்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மேலும் கொரோனா பெருந்தொற்று போன்ற இக்கட்டான காலத்தில் எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக விவசாயிகள் உள்ளனர் கூறிய அவர் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் விவசாயிகள் பெரும் பங்காற்றுகின்றனர் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து காந்தியின் பொருளாதார கொள்கைகளை பின்பற்றி இருந்தால் இந்தியா எப்போதோ தற்சார்பு நிலையை அடைந்திருக்கும் என்றும் பிரதமர் மோடி தனது வானொலி உரையில் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com