சித்தர் பீடத்தில் திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர்
சித்தர் பீடத்தில் திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர்புதியதலைமுறை

சீர்காழி | சித்தர் பீடத்தில் தமிழ் முறைப்படி திருமணம்.. தைவான் ஜோடிக்கு கோலாகலமாக டும்.. டும்..!

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம்.
Published on

சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்ததர்புரத்தில் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட சித்தர்பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.

சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும் இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர்,தைவான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வந்து வழிபாடு நடத்தி செல்வது வழக்கம்.

இந்நிலையில், சித்தர்பீடத்தில் தைவான் நாட்டை சேர்ந்த மணமகன் இ மிங், மணமகள் சு ஹூவா இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். முன்னதாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தைவான் நாட்டில் திருமண செய்து கொண்டனர். தொடர்ந்து இந்தியாவில் தமிழகத்தில் இந்து முறைபடி திருமணம் செய்து கொள்ள இருவரும் விரும்பியுள்ளனர்.

இதனையடுத்து தமிழ்நாடு வந்த இருவரும் தமிழ் முறைப்படி ஒளிலாயம் சித்தர் பீடத்தில் இன்று அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து அக்னி வலம் வந்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் மணமக்கள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தைவான் நட்டிலிருந்து வந்திருந்த இருவரின் உறவினர்களும் பட்டு வேஷ்டி, பட்டு சேலை அணிந்து தமிழர்களின் மரபுபடி மணமக்களை வாழ்த்தினர். வெளிநாட்டினர் திருமணத்தில் சுற்றுவட்டார பகுதி கிராம மக்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com