ஆந்திரா: தாசில்தார் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை ; மோப்ப நாயுடன் களமிறங்கிய போலீஸ்!

விசாகப்பட்டினத்தில் தாசில்தாரை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த  தாசில்தார் சனப்பல ராமையா
உயிரிழந்த தாசில்தார் சனப்பல ராமையா PT WEB

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புறநகர்ப் பகுதி தாசில்தாராக பணியாற்றி வந்தவர் சனப்பல ராமையா. விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

இதனிடையே நேற்று இரவு மர்மநபர் ஒருவர், இவரைத் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து கீழே இறங்கி வந்த தாசில்தார் அந்த நபருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தாசில்தாருக்கு பின் புறமாக வந்த மர்மநபர்கள் அவருடைய தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தாசில்தார் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் தாசில்தார் வீடு திரும்பாததால், அவருடைய மனைவி வெளியில் வந்து பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார், தாசில்தார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களைத் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த  தாசில்தார் சனப்பல ராமையா
‘நான் சாகல, செத்த மாதிரி நடிச்சேன்; ஏன்னா?’-புது வீடியோ வெளியிட்டு புயலை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com