கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்?

கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்?

கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்?
Published on

கொரோனாவுக்கான அறிகுறிகள் என்ன? ஆரம்பத்தில் எப்படி தொடங்கும்? என்பன போன்ற விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

186 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 321 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கோவிட்19 பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்து 667 ஆக அதிகரித்துள்ளது. அதனையொட்டி தமிழகம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொரோனா நோயினால் இந்த அளவுக்குப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும் இன்னும் பொதுமக்களுக்கு இது குறித்த தெளிவு பிறக்கவில்லை. விழிப்புணர்வும் ஏற்படவில்லை. பொது இடங்களில் மிகச் சர்வசாதாரணமாக சுற்றித்திரியும் மக்கள் ‘நமக்கு எல்லாம் இந்த வியாதி வராது’ என்ற அதித நம்பிக்கையில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு எப்படி தொடங்கும்? நாளுக்கு நாள் அதன் வீரியம் எப்படி வெளிப்படும்? ஆகிய விவரங்களை நாம் தெரிந்துக் கொள்வோம். பலரும் கொரோனா பாதிப்பு வந்த பிறகு 14 நாட்கள் கழித்துதான் அறிகுறிகள் தெரியும் என தவறாக நம்பிக் கொண்டுள்ளனர். ஆனால் கீழே உள்ள விவரங்கள் அதற்கு முற்றிலும் வேறாக உள்ளதை நீங்களே உணரலாம். ஆனால் இதுதான் நோய் தாக்குதலுக்கான சரியான விவரங்கள்.


1 முதல் 3 நாட்கள் - சளி, லேசான காய்ச்சல், சிலருக்கு தொண்டைவலி, வயிற்றுப்போக்கு அல்லது குமட்டல் உணர்வு

4 ஆம் நாள் - தொண்டை வலி அதிகரிக்கும், குரல் கரகரப்பாகும், காய்ச்சல் அதிகரிக்கும், சாப்பிடமுடியாது.

5 ஆம்நாள் - தொண்டை வலி அதிகரிக்கும், சாப்பிடும்போதும், விழுங்கும்போதும் வலி, உடல்வலி

6 ஆம் நாள் - காய்ச்சல் அதிகரிக்கும், வறட்டு இருமல், தொண்டைவலி, பேசும்போதும், விழுங்கும்போதும் வலித்தல், மூச்சுவிடுதலில் சிரமம்

7 ஆம் நாள் - காய்ச்சல் மேலும் அதிகரிக்கும், உடல்வலி, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரிக்கும்.

8 ஆம் நாள் - மூச்சுவிடுவது கடினமாகும். நெஞ்சு அடைக்கும். இருமல், தலைவலி, மூட்டுகளில் வலியுடன், ‌அதிக காய்ச்சல்

9 ஆம் நாள் - அனைத்து அறிகுறிகளும் தீவிரமடையும். எனவே நோய் இந்தளவுக்கு தீவிரமடையும் வரை காத்திருக்காமல் சாதாரண சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் மூச்சுவிடுதலில் சிரமம், நெஞ்சில் வலி தோன்றும்போது அலட்சியம் காட்டாமல் மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com