வங்கி மோசடியை தவிர்க்க சிப் டெபிட் கார்டு : எஸ்பிஐ அறிவுறுத்தல்

வங்கி மோசடியை தவிர்க்க சிப் டெபிட் கார்டு : எஸ்பிஐ அறிவுறுத்தல்

வங்கி மோசடியை தவிர்க்க சிப் டெபிட் கார்டு : எஸ்பிஐ அறிவுறுத்தல்
Published on

வங்கி மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு சிப் பொருத்திய டெபிட் கார்டுகளுக்கு மாறிக்கொள்ளும்படி எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் பொருத்திய, ரகசிய எண்ணுடன் கூடிய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை மட்டுமே விநியோகிக்கும்படி அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது. இஎம்வி எனப்படும் சிப் பொருத்தப்பட்ட கார்டுகள் ஸ்கிம்மர்களை பயன்படுத்தி வங்கி விவரங்கள் திருடப்படுவதை தடுக்கிறது. ஒருவருடைய டெபிட் அல்லது கிரெடிட் கார்டு திருடப்பட்டால் அது தவறாக பயன்படுத்தப்படுவதையும் தவிர்க்கும். 

இந்நிலையில், பழைய டெபிட் கார்டுகளுக்கு மாற்றாக வழங்கப்படும் சிப் கார்டுகள் எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ஜூன் மாத இறுதியில் எஸ்பிஐ 28.9 கோடி ஏடிஎம் கம் டெபிட் கார்டுகளை விநியோகித்திருந்தது. இவற்றில் பெருமளவு கார்டுகள் சிப் கார்டுகளாக மாற்றப்பட்டுவிட்டதாக ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டு இறுதிக்குள் சிப் பொருந்திய டெபிட் கார்டுகளுக்கு மாறும்படி வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com