உத்தரப் பிரதேச மாநிலத்தில் பள்ளிகளில் காலை நேர பிரார்த்தனை நடத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
பன்றிக் காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்தவே காலை நேர பிரார்த்தனை நடத்துவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மாநிலத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் பிரசாந்த் திரிவேதி தெரிவித்தார். இந்த ஆண்டில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை உத்தரப் பிரதேசத்தில் 695 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 21 பேர் இறந்துள்ளதாக மாநில அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.