‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மீது ஒடுக்குமுறை’: உ.பி.யில் பாஜக அமைச்சர் ராஜினாமா

‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மீது ஒடுக்குமுறை’: உ.பி.யில் பாஜக அமைச்சர் ராஜினாமா
‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மீது ஒடுக்குமுறை’: உ.பி.யில் பாஜக அமைச்சர் ராஜினாமா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், பா.ஜ.க. அமைச்சர் சுவாமி பிரசாத் மவுர்யா, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் நாட்டில் அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தார். அதன்படி 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில், பிப்ரவரி 10-ம் தேதி துவங்கி, மார்ச் 7-ம் தேதிவரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ளநிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் தொழிலாளர்கள் நலத் துறை அமைச்சரான சுவாமி பிரசாத் மவுர்யா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும், அக்கட்சியிலிருந்து விலகி, அகிலேஷ் பிரசாத் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் அவர் இணைந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலில், பா.ஜ.க தனது ஆட்சியை தக்கவைக்க கடும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதேபோல், மீண்டும் ஆட்சியை பிடிக்க, சமாஜ்வாதி கட்சியும் முனைப்பில் உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் முக்கிய அமைச்சராக கருதப்படும் சுவாமி பிரசாத் மவுர்யா ராஜினாமா செய்துள்ளது, அம்மாநில தேர்தலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் தனது விலகலுக்கு காரணமாக அவர் கூறியுள்ளதாவது, “மாறுபட்ட சித்தாந்தம் இருந்தாலும், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றினேன். ஆனால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகள், வேலையில்லாதவர்கள் மற்றும் சிறு வணிகர்கள் மீதான கடுமையான ஒடுக்குமுறை காரணமாக, நான் ராஜினாமா செய்கிறேன்” இவ்வாறு தனது ராஜினாமா கடிதத்தில் சுவாமி பிரசாத் மவுர்யா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com