தென்மேற்கு பருவமழைமுகநூல்
இந்தியா
பருவமழை இயல்பைவிட அதிகமாக பதிவாகும்!
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவமழை காலக்கட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் இயல்பை விட மழைப்பொழிவு அதிகமாக பதிவாகும் எனவும், ஒட்டுமொத்தமாக 87 சென்டிமீட்டர் பதிவாகும் நிலையில், இந்தாண்டு 105 சென்டிமீட்டருக்கு மேல் பதிவாக வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாகக் பதிவாகக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.