மனைவி மீது சந்தேகம் ! பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரன்

மனைவி மீது சந்தேகம் ! பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரன்

மனைவி மீது சந்தேகம் ! பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூரன்
Published on

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த கணவன், பிறந்த ஆண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் விகாரியா எனும் கிராமத்தில் வசிப்பவர் காலு நாயக். இவருக்கு மஞ்சுலா என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு ஏற்கெனவே 6 குழந்தைகள் இருக்கின்றனர்.

கடந்த 20 நாள்களுக்கு முன்பு மஞ்சுலாவுக்கு 7ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை பிறந்த சில நாட்களில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே சண்டை இருந்து வந்துள்ளது. அதாவது மஞ்சுலா வேறு ஒருவருடன் திருமணத்துக்கு மீறிய உறவு வைத்திருந்ததாக காலு நாயக் சந்தேகப்பட்டு அவரிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இதேபோல கடந்த திங்கள்கிழமையும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது மனைவியிடம் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதில் தன் கையில் வைத்திருந்த கோடாளியால் தூங்கிக்கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை வெட்டிய காலு நாயக், மனைவியையும் சரமாரியாக தாக்கியுள்ளார். கோடாளியால் வெட்டப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த போலீஸார் காலு நாயக்கை கைது செய்தனர். மேலும் காயமடைந்த மஞ்சுலாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பச்சிளம் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com