டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் மரணம்: சந்தேகம் எழுப்பும் பெற்றோர்
டெல்லியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் டெல்லியில் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். அவர் தன்னுடைய பெற்றோருடன் டெல்லியில் தங்கி வழக்கம்போல இன்று பணிக்கு சென்றுள்ளார். அவர் மின்சாரம்தாக்கி உயிரிழந்ததாக அழகு நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து அவரது உடல் அழகு நிலையத்தில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. லட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpttvonline%2Fvideos%2F621812145843767%2F&show_text=false&width=267&t=0" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>