சஸ்பெண்ட்
சஸ்பெண்ட்முகநூல்

14 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்

நாடாளுமன்ற எம்பிக்கள் 14 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மக்களவைக்குள் இருவர் நுழைந்து முழக்கங்களை எழுப்பியது சர்ச்சையானது. பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கேள்வி எழுப்பிய மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்கள் 14 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த 146 எம்பிக்கள் அந்த கூட்டத்தொடர் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டனர். 14 எம்பிக்கள் விவகாரம் அவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

சஸ்பெண்ட்
மக்களவை வரலாற்றில் 46 எம்பிக்களை இடைநீக்கம் செய்து மோடி அரசு சாதனை: மதுரை எம்.பி சு.வெங்கடேசன்

இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் சூழலில், எம்பிக்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பிக்கள் அனைவரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கலாம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com