நிபா வைரஸைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா

நிபா வைரஸைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா

நிபா வைரஸைத் தொடர்ந்து கேரளாவை மிரட்டும் ஷிகெல்லா

கேரளாவில் கடந்த மே மாதத்தில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ் தொற்று  தாக்குதலுக்கு 17 பலியாகினர். பின்னர் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் ஜூன் முதல் வாரத்துக்குள்ளாக அது கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்காக கேரள மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள்ளாகவே அங்கு ஷிகெல்லா பாக்டீரியாவின் பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன.

ஷிகெல்லா பாக்டீரியத் தொற்றினால் பாதிக்கப்பட்டு கேரளாவின் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 வயதுக் குழந்தை ஜியான் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்தார். கடந்த ஜூன் மாதத்தில் இதே கோழிக்கோட்டில் இருவரும், திருவனந்தபுரத்தில் ஒருவருமாக 3 பேர் ஷிகெல்லா பாதிப்புக்கு உயிரிழந்த நிலையில் ஜியானின் உயிரிழப்பு பாக்டீரியா தாக்குதலின் தீவிரத்தை உணர்த்தி உள்ளது.

ஷிகெல்லா பாக்டீரியா தூய்மையற்ற உணவு, அசுத்தமான நீர் ஆகியவற்றின் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தொற்று நோயாகவும் பரவக் கூடியது. மனித உடலுக்குள் செல்லும் இந்த பாக்டீரியா வளர்ச்சி அடைய ஒரு வாரம் தேவைப்படும், அதுவரை பிரச்னை பெரிதாகத் தெரியாது. பின்னர் காய்ச்சலையும், வயிற்று வலியையும், கடுமையான வயிற்றுப் போக்கையும் ஷிகெல்லா பாக்டீரியா ஏற்படுத்தும்.

உலகில் பெரும்பான்மையான வயிற்றுப் போக்குப் பாதிப்புகளுக்கு இந்த பாக்டீரியாவே காரணமாக உள்ளது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஷிகெல்லா பாக்டீரியா தாக்கும்போது, அது உயிரிழப்பில் போய் முடிகின்றது. தூய்மையும் கவனமுமே இந்த பாக்டீரியாவின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். கேரளாவில் இப்போது பருவமழைக் காலம், அதனால் நோய் பரவும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது ஒரு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com