“ஆண்கள் மட்டும்தான் செய்வீர்களா?” - பாட்டில் சேலஞ்ச் செய்து அசத்திய சுஷ்மிதா சென்

“ஆண்கள் மட்டும்தான் செய்வீர்களா?” - பாட்டில் சேலஞ்ச் செய்து அசத்திய சுஷ்மிதா சென்

“ஆண்கள் மட்டும்தான் செய்வீர்களா?” - பாட்டில் சேலஞ்ச் செய்து அசத்திய சுஷ்மிதா சென்
Published on

சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் “பாட்டில் சேலஞ்ச்” யை முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் செய்து ஆண்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், பிட்னஸ் சேலஞ்ச் என பல்வேறு சவால்கள் தோன்றி மறைந்ததை நாம் கண்டிருக்கிறோம். அந்த வகையில் தற்போது பிரபலமடைந்து ட்ரெண்டாகி வருகிறது பாட்டில் மூடி சேலஞ்ச். கஜகஸ்தானை சேர்ந்த டேக்வாண்டோ தற்காப்பு கலை வீரர் பராபி டாவ்லட்சின், தண்ணீர் பாட்டிலை ஒருவர் பிடித்திருக்க மூடி மட்டும் தனியாக தெறித்து பறக்கும் வகையில் பேக் கிக் (back kick) முறையில் பாட்டிலை உதைக்கும் வீடியோவை வெளியிட்டார்.

இதனை வேறு யாராவது செய்ய முடியுமா என சவால் விடுக்க, சமூகவலைதளங்களில் பாட்டில் மூடி சேலஞ்ச் ட்ரெண்டாகி விட்டது. ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், அமெரிக்க பாப் பாடகர் ஜான் மேயர், ஹாலிவுட் நடிகை வொயிட்னி கம்மிங்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாட்டில் மூடி சேலஞ்சை வெற்றிகரமாக செய்து முடித்து சமூகவலைதளங்களில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆண்களுக்கு நிகராக முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் பாட்டில் மூடி சேலஞ்ச் செய்து அசத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல, தனது வளர்ப்பு மகள்களின் பாட்டில் சேலஞ்ச் பதிவுகளையும் அவர் பதிவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பிரபலமடைந்து வரும் பாட்டில் சேலஞ்சில் மேலும் பலர் சமூகவலைதளங்களில் வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Why should boys have all the fun!!!

வைரலாகி வரும் “பாட்டில் சேலஞ்ச்” யை பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும் செய்து ஆண்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com