பாக்.வெளியுறவு அமைச்சரைச் சந்திக்க மாட்டார் சுஷ்மா
ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றடைந்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரை சந்திக்க மாட்டார் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவாரம் நியூயார்க்கில் தங்கவுள்ள சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்கா, ஜப்பான், பூட்டான், பொலிவியா, துனிஷியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு மற்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். எனினும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தமாட்டார் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவில் சீனாவின் ஆதிக்கம் குறித்து அவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்கிய சுஷ்மா ஸ்வராஜை, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் வரவேற்றனர்.