பல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'! 

பல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'! 

பல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'! 
Published on

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ் முதல் பெண் என்ற சில பெருமைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

இந்திய அரசியலில் உச்சங்களை தொட்ட சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் ஒருவர். இளம் வயதிலேயே தனது அரசியல் பயணத்தை தொடங்கிய சுஷ்மா, இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற சுஷ்மா, 1970-களில் ஜனசங்கத்தின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

1973ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற வழக்கறிஞரானார். அவசர நிலைக்குப்பின் பா.ஜ.க.வில் இணைந்த சுஷ்மா, முதலில் ஹரியானா மாநில அரசியலில் கவனம் செலுத்தி, தனது 25ஆவது வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரானார். 

அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே பா.ஜ.க.வின் ஹரியானா மாநிலத் தலைவராக பதவியேற்றார். ஹரியானா மாநில அமைச்சராக 2 முறை பணியாற்றினார். 3 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும், 4 முறை மக்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‌5 முறை மத்திய அமைச்சராக பணியாற்றியுள்ள சுஷ்மா மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டவர். 

முதல் பெண் என்ற சில பெருமைகள்....

1. டெல்லியின் முதல் பெண் முதலமைச்சர்

2.பாஜகவில் இருந்து முதலமைச்சராக பதவியேற்ற முதல் பெண்

3.தேசியக் கட்சியின் முதல் பெண் செய்தித்தொடர்பாளர்

4.முழு நேர முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்

5.மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த முதல் பெண்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com