ஆந்திர ஆளுநராக நியமிக்கப்படவில்லை: சுஷ்மா மறுப்பு
ஆந்திர மாநில ஆளுநராக தான் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார்.
ஆந்திர ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதாக நேற்று தகவல் வெளியானது. தற்போது ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில ஆளுநராக நரசிம்மன் இருந்து வருகிறார். அவருக்குப் பதிலாக, ஆந்திராவின் ஆளுநராக சுஷ்மா ஸ்வராஜ் பதவி ஏற்க இருப்பதாகக் கூறப்பட்டது.
’ஆந்திர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சுஷ்மாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அதை ஹர்ஷர்வர்தன் நீக்கினார்.
ஆந்திர மாநில ஆளுநராக தான் நியமிக்கப்பட்டதாக வெளியான தகவலை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறுத்துள்ளார். தனது டுவிட்டர் பதவில் சுஷ்மா ஸ்வராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகமும் மறுத்துள்ளது.