கொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேசுவது..? சுஷ்மா சுவராஜ்

கொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேசுவது..? சுஷ்மா சுவராஜ்
கொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேசுவது..? சுஷ்மா சுவராஜ்

கொலைகாரர்களை கொண்டாடும் நாட்டுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியுமென உலக நாட்டுத் தலைவர்களிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய அவர், இரு நாடுகள் உடனான பேச்சுவார்த்தைக்கு இந்தியா முட்டுக்கட்டை போடுவதாக பாகிஸ்தான் கூறியிருப்பது பொய் என்றும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்கு பல்வேறு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டாலும், பாகிஸ்தானின் நடத்தையால் அவை தடைபடுவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுதிய கடிதத்தை ஏற்றுக்கொண்ட இந்திய பிரதமர் மோடி, இரு நாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்க அறிவுறுத்தினார். ஆனால் ராணுவத்தினர் மூவரை தீவிரவாதிகள் கொன்றதாக தெரியவந்த பிறகே பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது என்றும் பேசிய அவர், பேச்சுவார்த்தை நடத்துவற்கான சமிக்ஞையா இது என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com