கல்லீரல் சிகிச்சை: பாக். பெண்ணுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு

கல்லீரல் சிகிச்சை: பாக். பெண்ணுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு

கல்லீரல் சிகிச்சை: பாக். பெண்ணுக்கு விசா வழங்க சுஷ்மா உத்தரவு
Published on

இந்தியா வந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வசதியாக மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானியருக்கு விசா வழங்க வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உத்தரவிட்டுள்ளார்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட அன்வர் ஹஸன் என்பவரது மனைவி, இந்தியாவுக்கு வந்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வசதியாக தங்களுக்கு உடனடியாக விசா வழ‌ங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு ட்விட்டர் மூலம் கடிதம் அனுப்பி இருந்தார். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட சுஷ்மா ஸ்வராஜ், சம்பந்த்ப்பட்ட பாகிஸ்தானியருக்கு உடனடியாக இந்திய விசா வழங்கும்படி உத்தரவிட்டார். அத்துடன் அந்த பெண்ணுக்கும் இதுகுறித்து ட்விட‌டரில் தகவல் அளித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com