இந்திய தலைநகரின் முதல் பெண் முதல்வர்.. சுஷ்மா சுவராஜ் நினைவு தினம் இன்று!

இந்திய தலைநகரின் முதல் பெண் முதல்வர்.. சுஷ்மா சுவராஜ் நினைவு தினம் இன்று!
இந்திய தலைநகரின் முதல் பெண் முதல்வர்.. சுஷ்மா சுவராஜ் நினைவு தினம் இன்று!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் முதலாமாண்டு நினைவு நாள் பா.ஜ.கவினரால் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மக்களவையின் முதல் எதிர்க்கட்சி பெண் தலைவர், டெல்லியின் முதல் பெண் முதல்வர், பாஜகவின் முதல் பெண் செய்தி தொடர்பாளர் என்ற பல்வேறு பெருமைகள் சுஷ்மா சுவராஜிற்கு உண்டு.

ஹரியானாவில் பிப்ரவரி 14, 1962 ஆம் ஆண்டு பிறந்த சுஷ்மா சுவராஜ் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு முதல்இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் சிறுநீரக பாதிப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி உயிரிழந்தார். இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு 1998 ஆம் ஆண்டு முதல்வராக பதவியேற்றதன் மூலம் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com