பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய கீதா எங்கள் பெண்: ஜார்க்கண்ட் தம்பதி

பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய கீதா எங்கள் பெண்: ஜார்க்கண்ட் தம்பதி
பாகிஸ்தானில் இருந்து நாடு திரும்பிய கீதா எங்கள் பெண்: ஜார்க்கண்ட் தம்பதி

பாகிஸ்தானில் இருந்து தாயகம் திரும்பிய மாற்றுத்திறனாளி பெண் கீதா, தங்களது குழந்தை தான் என ஜார்க்கண்டை சேர்ந்த தம்பதியினர் கூறியுள்ளனர்.

காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கீதா, 17 வருடங்களுக்கு முன்பு ரயிலில் தனியாக லாகூர் சென்றுள்ளார். அங்குள்ள தன்னார்வ அமைப்பினர் கீதாவை மீட்டு, கராச்சி அழைத்து வந்துள்ளனர். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதை‌ அடுத்து, கடந்த 2015 ஆம் ஆண்டு கீதா இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார்.

இந்தியா வந்து 2 ஆண்டுகள் ஆன பின்னரும், கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்க நாட்டு மக்கள் உதவி செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கார்வா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கீதாவை செய்திகளில் பார்த்ததாகவும் அவர் தங்களின் குழந்தை தான் எனவும் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com