\
எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த சந்தீப் நஹார் தற்கொலை.. அதிர்ச்சியில் பாலிவுட்!

எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த சந்தீப் நஹார் தற்கொலை.. அதிர்ச்சியில் பாலிவுட்!

எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த சந்தீப் நஹார் தற்கொலை.. அதிர்ச்சியில் பாலிவுட்!
Published on

எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகரான சந்தீப் நஹார், அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. இந்த படத்தில் தோனியாக நடித்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இச்சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.  சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான சர்ச்சை இன்னும் முடிவிற்கு வராத நிலையில், அதே படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகரான சந்தீப் நஹார், இன்று மும்பை கொரேகானில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தோனி படத்தில் இவர் சுஷாந்திற்கு நண்பனாக நடித்துள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன் சந்தீப் நஹார், வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்ததாகவும், சிறு விஷயத்திற்குக் கூட மனைவி அடிக்கடி சண்டையிடுவார் என்றும், இதனால் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அளவிற்கு மோசமான முடிவை எடுக்கக் கூடும் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com