ஆணவக் கொலை: திருமண நாளில் அமிர்தாவுக்கு பிறந்தது ஆண்குழந்தை!
தெலங்கானாவில் ஆணவக் கொலை செய்யப்பட்ட பினராயிக்கு அவரது திருமண நாளில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் மிரியல்குடாவைச் சேர்ந்தவர் மாருதிராவ். ரியல் எஸ்டேட் அதிபர். இவரது ஒரே மகள் அமிர்தா என்ற அமிர்தவர்ஷினி. ஐதராபாத்தில் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது உடன் பணி யாற்றிய பினராயி என்பவரைக் காதலித்தார். அவரை திருமணம் செய்துகொள்ளும் ஆசையை, தந்தை மாருதி ராவிடம் சொன்னார். பினராயி, தலித் கிறிஸ்தவ வகுப்பைச் சேர்ந்தவர். இதனால் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார், மாருதி ராவ். பினராயி வீட்டில் சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து வீட்டை மீறி பினராயியை திருமணம் செய்துகொண்டார், அமிர்தா. இருவரும் தனியாக வசித்து வந்தனர். அமிர்தா கர்ப்பமானார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி, அவரும் பினராயும் பரிசோதனைக்காக மருத்துவனை சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கூலிப்படையினர் பினராயியை, நடுரோட்டில் வெட் டிக் கொன்றனர். இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது ஆணவக் கொலை என்பது பின்னர் தெரியவந்தது. இக்கொலை வழக்கில், அமிர்தாவின் தந்தை மாருதிராவ் மற்றும் அவர் உறவினர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த திருமணம் பிடிக்காததால், கூலிப்படை மூலம் பினராயை கொ லை செய்ததாக, மாருதி ராவ் ஒப்புக் கொண்டார். இந்தக் கொலைக்காக, கூலிப்படைக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் தருவதா கக் கூறி, 15 லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் தனது கணவர் வீட்டில் வசித்து வந்த அமிர்தாவுக்கு கடந்த 24 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்று தான் அவர் திருமண நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக பினராயி-யின் தந்தை தெரி வித்துள்ளார். இருந்தாலும் மாருதி ராவ் ஆட்களால் ஆபத்து நேரிடலாம் என்பதால், போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார். பாது காப்புக் கருதி எந்த மருத்துவமனையில் குழந்தை பிறந்தது என்ற தகவலை அவர் வெளியிடவில்லை.