பண்டிகை விற்பனையில் வெளிப்பட்ட சீன எதிர்ப்புணர்வு - சர்வே முடிவில் தகவல்

பண்டிகை விற்பனையில் வெளிப்பட்ட சீன எதிர்ப்புணர்வு - சர்வே முடிவில் தகவல்
பண்டிகை விற்பனையில் வெளிப்பட்ட சீன எதிர்ப்புணர்வு - சர்வே முடிவில் தகவல்

இந்த ஆண்டு பண்டிகை நாட்களில் 71% இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை என சர்வே முடிவுகளில் தெரியவந்துள்ளது.

ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன ராணுவ வீரர்களின் மோதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவியது. அதேநேரம் இந்திய மக்களிடமும், சீனப் பொருட்களின் பயன்பாடுகளுக்கு எதிரான மனப்போக்கும் மேலோங்கியது. அது,  பண்டிகை காலங்களில் சீனப் பொருட்களின் விற்பனை வரையிலும் வெளிப்பட்டு வருகிறது.

'Local Circles' என்ற சமூக ஊடகதளம், இந்தியாவில் 204 மாவட்டங்களில் மொத்தம் 14 ஆயிரம் பேரிடம் சர்வே எடுத்துள்ளது. நவம்பர் 10-15 தேதிகளில் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் 71 சதவீதம் பேர் சீனப்பொருட்களை விழிப்புடன் வாங்காமால் தவிர்த்தது தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு சர்வேப்படி, 29 சதவீதம் பேர் சீனப்பொருட்களை வாங்கியுள்ளனர். இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சர்வேயுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு. இதேபோல் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட சர்வேயில், 48 சதவீதம் பேர் சீனப் பொருட்களை வாங்கியிருந்தனர். இந்த ஆண்டு சீனா, இந்திய மக்கள் சீனப்பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க “Made in China” என்ற லேபிளை மாற்றி “Made in PRC” என்று பொருட்களை விற்பனை செய்ததால், சில வாடிக்கையாளர்களால் அடையாளம் காண இயலவில்லை.

சமீபத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு சர்வேயில், சீனப் பொருட்களை விரும்பி வாங்குவதற்கான காரணங்களை பங்கேற்பாளர்கள் கொடுத்துள்ளனர். அந்தத் தரவின்படி, 66 சதவீதம் பேர், கொடுக்கும் பணத்திற்கு பொருட்கள் அதிக தரத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். 13 சதவீதம் பேர், பொருட்களின் தனித்தன்மைக்காக வாங்குவதாகக் கூறியுள்ளனர். மற்ற 25 சதவீதம் பேரால் தெளிவான பதிலைக் கொடுக்க முடியவில்லை.

ஒட்டுமொத்த அடிப்படைத் தரவுகளை வைத்துப் பார்க்கும்போது, இந்தியர்கள் இந்த ஆண்டு குறைவான அளவிலேயே சீனப் பொருட்களை வாங்கியுள்ளனர். எனவே, இந்தியாவிலேயே பலவிதமான உற்பத்தியை மேம்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை இந்திய அரசுக்கு இந்த தரவு எடுத்துக் கூறியுள்ளது. மேலும், இந்தியாவிலேயே உயர்தரமான பொருட்கள் தயாரிக்கப்படும்போது சிறுதொழில் நிறுவனங்களுக்கும் அரசின் உதவி கிடைக்கும், அதேசமயம் இந்திய மற்றும் உலக அளவிலான வாடிக்கையாளர்களின் முக்கியத்துவத்தைப் பெறும் என்றும் கூறியுள்ளது.

சர்வேயில் கலந்துகொண்ட 14 ஆயிரம் பேரில், 66 சதவீதம் ஆண்கள், 34 சதவீதம் பெண்கள். அதில் 48 சதவீதம் முதல் அடுக்கு நகரத்தையும், 30 சதவீதம் இரண்டாம் அடுக்கு நகரத்தையும், 22 சதவீதம் மூன்றாம் - நான்காம் அடுக்கு நகரங்களையும், கிராமப்புறங்களையும் சேர்ந்தவர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com