உ.பி. ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு?: அமைச்சர் சுரேஷ் பிரபு
உத்தரப் பிரதேச ரயில் விபத்துக்கு யார் பொறுப்பேற்பது என்பதை இன்று இறுதி செய்ய வேண்டும் என ரயில்வே வாரியத் தலைவரை அமைச்சர் சுரேஷ் பிரபு கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகில் உத்கல் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்துக்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பதை முடிவு செய்யுமாறு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவுறுத்தியுள்ளார். இன்றைய விசாரணையின் முடிவில் கிடைக்கும் சாட்சிகளை வைத்து இதனை இறுதி செய்ய வேண்டும் என்று ரயில்வே வாரியத் தலைவரை சுரேஷ் பிரபு கேட்டுக்கொண்டுள்ளார்.
விபத்துக்கு பிந்தைய நிலைமையை தான் உன்னிப்பாக கண்காணித்து வருகிறேன். சம்பவ இடத்தில் இருப்புப் பாதைகளை சீரமைக்க முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.