கேரள மாநில பாஜக தலைவராக நடிகர் சுரேஷ் கோபி நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநில பாஜக தலைவராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, மிஷோராம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, மாநில பாஜக தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.சுரேந்திரன், எம்.டி.ரமேஷ், சோபனா சுரேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பி.கே.கிருஷ்ண தாஸ், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைவர் பதவிக்கான பரிசீலனையில் உள்ளனர்.
இந்நிலையில் நடிகரும் மாநிலங்களவை எம்.பியுமான சுரேஷ் கோபியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார். மாநில பாஜக தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக அவரிடம் சுரேஷ் கோபி கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் கேரள மாநில பாஜக தலைவர் ஆக இருப்பதாக கேரளாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுரேஷ் கோபி தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ படங்களில் நடித்துள்ளார். இப்போது விஜய் ஆண்டனியின் ’தமிழரசன்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

