\
மாணவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட ஆசிரியர் - வைரல் வீடியோ

மாணவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட ஆசிரியர் - வைரல் வீடியோ

மாணவர்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட ஆசிரியர் - வைரல் வீடியோ
Published on

சூரத்தில் மாணவனை அடித்த ஆசிரியரை உறவினர்கள் தாக்கிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 வகுப்பு மாணவர்கள் சிலர் கழிவறையில் விளையாடியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவன் ஒருவரிடம் விசாரித்த ஆசிரியர் அவரைக் கண்டித்து அடித்ததாக தெரிகிறது. வகுப்புக்கு வெளியே நிற்கும்படி செய்ததாகவும் தெரிகிறது. இந்தக் காட்சி பள்ளி வகுப்பறைக்கு வெளியே இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

தான் தாக்கப்பட்டது குறித்து அந்த மாணவன் பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், தங்களது உறவினர்களுடன் வகுப்பறைக்கு சென்றுள்ளனர். அங்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரை இழுத்து வந்து சரமாரியாக தாக்கினர். அருகில் இருந்த சக ஆசிரியர்கள் நெருங்க முடியாத வகையில் ஆசிரியரை கடுமையாக தாக்கிய வீடியோ பள்ளியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தாக்கப்பட்ட ஆசிரியர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com