ரூ.600 கோடியை செலுத்த சஹாரா குழுமத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ரூ.600 கோடியை செலுத்த சஹாரா குழுமத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.600 கோடியை செலுத்த சஹாரா குழுமத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சஹாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் செபிக்கு செலுத்த வேண்டிய ரூ.600 கோடியை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்குள் செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு செலுத்த தவறினால் சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் எச்சரித்துள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சஹாரா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை தராமல், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, புகார் எழுந்தது. இதையடுத்து, சஹாரா குழுமத்தின் தலைவர், சுப்ரதா ராயை கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சி.பி.ஐ., கைது செய்தது. சஹாரா குழுமத்தின் இயக்குனர்கள், அசோக் ராய் சவுத்ரி, ரவி சங்கர் துபே ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 600 கோடி ரூபாயயை செபியில் செலுத்த மேலும் அவகாசம் கேட்டு சுப்ரதா ராய் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த உச்சநீதிமன்றம், செபிக்கு செலுத்த வேண்டிய ரூ.600 கோடியை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்த தவறினால் சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் கூறியுள்ளது.

முன்னதாக முதலீட்டாளர்களிடம் இருந்து முறை கேடாக திரட்டிய 24,029 கோடி ரூபாயை, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 15% வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என சஹாரா நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே சுப்ரதா ராய்க்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி வரை பரோல் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த பரோல் காலத்தில் சிறைக்கு வெளியில் இருக்கும் சுப்ரதா ராய் 600 கோடி ரூபாயை செபியில் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு செலுத்த தவறினால் பிப்ரவரி 6ம் தேதி சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது. தற்போது மேலும் கால அவகாசம் கேட்டுள்ள சுப்ரதா ராய்க்கு உச்சநீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com