உ.பி., லக்கிம்பூர் வன்முறை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நாளை விசாரணை

உ.பி., லக்கிம்பூர் வன்முறை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நாளை விசாரணை
உ.பி., லக்கிம்பூர் வன்முறை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நாளை விசாரணை

லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் லக்கிம்பூர் கேரி என்னுமிடத்தில் சாலையில் முழக்கங்களை எழுப்பியபடி சென்ற விவசாயிகளின் மீது பின்புறமாகக் காரை ஏற்றி 4 விவசாயிகளின் படுகொலைக்குக் காரணமான இந்திய ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்களைக் கைது செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தை சந்திக்க லக்கிம்பூர் சென்றிருந்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நாளை விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com