பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்றுமாசுபாடா? - பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ்

பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்றுமாசுபாடா? - பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ்
பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்றுமாசுபாடா? - பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ்

டெல்லியில் காற்று மாசு ஏற்படும் விவகாரம் தொடர்பாக 3 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. புகை மண்டலமாக காட்சியளித்ததால் நேற்று 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டன. பள்ளிகள் நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டடம் கட்டும் பணிகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுவிட்டன. 

இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு ஏற்படும் விவகாரம் தொடர்பாக 3 மாநில தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நவம்பர் 6 ஆம் தேதி ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கண்ட மாநிலங்களில் அதிகளவு பயிர்க்கழிவுகளை எரிப்பதாலேயே காற்று மாசு ஏற்படுவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com