இந்தியா
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்
இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையில்லை: உச்ச நீதிமன்றம்
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்க உச்ச நீதிமன்றம் அனுமதி் வழங்கியுள்ளது.
இறைச்சிக்காக கால்நடைகளை விற்கத் தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில். மத்திய அரசின் அறிவிக்கையில் சில திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், மதுரை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு செல்லும் எனத் தெரிவித்தனர். ஆகவே, நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடையில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.