
மணிப்பூர் வன்முறையில் 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட 2 பெண்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை அமர்வு, இத்தகைய கொடுமைகளுக்கு ஆளான பல பெண்கள் இன்னமும் புகார் கொடுக்காமல் இருக்கின்றனர். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை பரந்த கண்ணோட்டத்துடன் விசாரிக்க வேண்டும் என்றது. மேலும், மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் குறித்து இதுவரை எத்தனை முதல் தகவல்அறிக்கைளை பதிவு செய்துள்ளீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.