“BS4 வாகனங்களை 2020க்கு பிறகு விற்க கூடாது” - உச்சநீதிமன்றம்

“BS4 வாகனங்களை 2020க்கு பிறகு விற்க கூடாது” - உச்சநீதிமன்றம்
“BS4 வாகனங்களை 2020க்கு பிறகு விற்க கூடாது” - உச்சநீதிமன்றம்

BS - 4 விதிமுறைகள் படி தயாரிக்கப்பட்ட வாகனங்களை வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு விற்கவோ பதிவு செய்யவோ கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

வாகனங்கள் உமிழும் புகையால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து வாகனங்களின் புகை உமிழ்வு அளவை படிப்படியாக குறைக்கும் வகையில் வாகனங்கள் மற்றும் எரிபொருளில் தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.  இந்திய அரசின் கீழ் BSES எனப்படும் BHARAT STAGE EMISSION STANDARDS என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையின் அளவைக் கணக்கிட்டு சுற்றுச்சுழலுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும். இது காலத்திற்கு ஏற்றால் போல் இதன் தொழில் நுட்பங்கள் வளர்ந்து BS 2 ,3 ,4 என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் பாரத் ஸ்டேண்டேர்டு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.  

BS 3 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் முதல் BS 4 வாகனங்கள் விற்கப்படுவது கட்டாயமாக்க‌ப்பட்டது. சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டுவந்த இந்தத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.  

இந்நிலையில்  BS 4 வாகனங்களும் 2020ம் ஆண்டு ஏப்ரல் வரை மட்டுமே விற்கப்பட வேண்டும் என்றும், அதன் பிறகு மேலும் தொழில் நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு BS -6 வரிசையில் வாகனங்களை விற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. BS வரிசையில் BS 5 இடம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் BS 4 வாகனங்களை வரும் 2020ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு 6 மாதங்கள் வரை விற்க கூடுதல் அவகாசம் அளிக்க கோரி வாகன நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 

வழக்கில் அரசு சார்பில் வாதாடிய வாகன நிறுவனங்கள் கூறுவது போலவே கூடுதலாக 3 முதல் 6 மாதம் அவகாசம் அளிக்கலாம் என்று கூறினார். வாதங்களை கேட்டறிந்த வழக்கறிஞர்கள், வாகன நிறுவனங்களின் கோரிக்கைகளை நிராகரித்தனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திட்டமிட்டபடி 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையே BS 4 வாகனங்கள் விற்கப்படவும், பதிவு செய்யப்படவும் வேண்டும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கு பிறகு BS 6 விதிகள் அமலுக்கு வர வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com