ஃபேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்: உச்ச நீதிமன்றம்

ஃபேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்: உச்ச நீதிமன்றம்
ஃபேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்: உச்ச நீதிமன்றம்

சமூக வலைதளங்கள் மக்களின் கருத்துகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் விளைவுகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஃபேஸ்புக் இந்தியா நிர்வாக இயக்குநர் அஜித் மோகனுக்கு, டெல்லி சட்டப்பேரவை நல்லிணக்க குழு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அஜித் மோகன் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, நோட்டீஸை ரத்துசெய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 27 கோடி பயனாளர்களை கொண்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியம் என அறிவுறுத்தினர். ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பதிவுகளால் தேர்தல் நடைமுறைகளே அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்க செய்வதில் சமூக ஊடகங்கள் மிக முக்கிய பங்கு வகித்தாலும், சில சமயங்களில் அமைதியை சீர்குலைக்கும் பதிவுகளுக்கான தளமாகவும் அமைந்துவிடுவதை சுட்டிக்காட்டினர். இதுபோன்ற பதிவுகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஃபேஸ்புக் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டனர். சமூக ஊடக பிரதிநிதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரம் டெல்லி சட்டப்பேரவைக்கும் அதன் குழுவுக்கும் உள்ளது என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com