இந்தியா
வாக்களிக்காவிடில் கேள்விகேட்க உரிமை இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து
வாக்களிக்காவிடில் கேள்விகேட்க உரிமை இல்லை: உச்சநீதிமன்றம் கருத்து
தேர்தலில் வாக்களிக்காவிட்டால் அரசாங்கங்களை கேள்வி கேட்க உரிமை இல்லை என பொதுநல வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என தனேஷ் லெஷ்தான் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தேர்தலில் வாக்களித்தீர்களா என தனேஷ் லெஷ்தானிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தான் இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களித்தது இல்லை என்று அவர் பதிலளித்தார். வாக்களிக்காதபட்சத்தில் அரசாங்கங்களை கேள்வி கேட்கவோ, குற்றம்சாட்டவோ உரிமை இல்லை என விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவித்தனர்.