தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் !

தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் !
தீபாவளிக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் !

நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும், வெடிக்கவும் தடை இல்லை என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சில நிபந்தனைகளும் விதித்துள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் பட்டாசுக்குத் தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்ரி மற்றும் ஆசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், நாடு முழுவதும் பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் தடை இல்லை என தெரிவித்துள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் ஆன்லைனில் பட்டாசு விற்பனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையெடுத்து பட்டாசு விற்பனைக்கு சில நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

பட்டாசுக்கான நிபந்தனைகள் :-

1. லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டும்.

2. குறைந்த அளவிலான புகை வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

3. அதிகளவிலான சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது.

4. மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

5.விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும். 

6. ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது. 

7.தீபாவளி அன்று இரவு 8 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க  வேண்டும். 

8. புத்தாண்டு  மற்றும் கிறிஸ்துமஸ் அன்று இரவு 11.55 மணி முதல் நள்ளிரவு 12.30 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

இதனைதொடர்ந்து அங்கீகாரம் இல்லாத பட்டாசுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது. மேலும் டெல்லி முழுவதும் பட்டாசுக்களை வெடிக்க போட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கியுள்ளது என்பது குறிப்பிடத்த்க்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com