சாதி, மதத்தின் பெயரில் வாக்கு கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாதி, மதத்தின் பெயரில் வாக்கு கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

சாதி, மதத்தின் பெயரில் வாக்கு கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on

தேர்தலில் சாதி, மதத்தின் பெயரால் ‌வாக்கு கேட்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்துத்வா என்ற பெயரை தேர்தல்களின்போது அரசியல்வாதிகள் பயன்படுத்துவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்தல் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறிய நீதிபதிகள், முற்றிலும் மதச்சார்பற்ற வழியிலேயே தேர்தல் நடைமுறைகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான உறவு, அவரவர் தனிப்பட்ட தேர்வு என்று கூறிய நீதிபதிகள், அதில் அரசு தலையிடுவது தடை செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். வழக்கில் பல தரப்பட்டவர்களின் வாதங்களைக் கேட்டபிறகு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com