இந்தியா
ஐஐடி மாணவர் சேர்க்கை: இடைக்காலத் தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
ஐஐடி மாணவர் சேர்க்கை: இடைக்காலத் தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்
ஐஐடி மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது.
ஐஐடி நுழைவுத் தேர்வில் விடைகளுக்கு போனஸ் மதிப்பெண் வழங்கும் முடிவை எதிர்த்து சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில் மத்திய அரசும், ஐஐடிக்களின் நிர்வாகங்களும் அளித்த விளக்கங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சலிங்குக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கினர். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

