மாதவிடாய் நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு விடுப்புக்கோரி வழக்கு - உச்சநீதிமன்றம் அறிவுரை

மாதவிடாய் நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு விடுப்புக்கோரி வழக்கு - உச்சநீதிமன்றம் அறிவுரை
மாதவிடாய் நாட்களில் பணிபுரியும் பெண்களுக்கு விடுப்புக்கோரி வழக்கு - உச்சநீதிமன்றம் அறிவுரை
மாதவிடாய் நாட்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பெண்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் மாதவிடாய் நாட்களில் மாணவிகள் மற்றும் பணி செய்யும் பணிப் பெண்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் தானாக முன்வந்து விடுப்பு வழங்கி வருவதாகவும், இதனை அரசுகளும் பின்பற்றும் வகையில் பொதுவான ஒரு உத்தரவாக நாடு முழுவதும் பின்பற்றக்கூடிய ஒன்றாக பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரம் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும், அதே நேரத்தில் மனுவின் கோரிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தை மனுதாரர் நாடலாம் என அறிவுரை கூறி வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com