பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது எங்கள் வேலையா? - கொதித்தெழுந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது எங்கள் வேலையா? - கொதித்தெழுந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது எங்கள் வேலையா? - கொதித்தெழுந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்!

இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்க கோரிய பொது நல மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவன்ஸ் சேவா சதன் என்ற பொதுநல அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்த பொதுநல மனுவில் இந்தியாவின் தேசிய விலங்காக பசுவை அறிவிக்க கோரிக்கை வைத்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கே கவுல் மற்றும் நீதிபதி அபய் எஸ் ஓகா ஆகிய இருவர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவரும், “நாங்கள் அபராதம் விதிப்போம் என தெரிந்தும்கூட எதற்காக இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் யாருடைய தனிநபர் உரிமை பாதிக்கப்பட்டிருக்கிறது? நாட்டின் தேசிய விலங்கை அறிவிப்பது எங்களது வேலை என நினைக்கிறீர்களா?” என கடும் கோபத்துடன் மாறி மாறி கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “பசுக்களை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமானது” எனக் கூறினார். அப்போது மேலும் கோபமடைந்த நீதிபதிகள், “நிச்சயமாக உங்களுக்கு நாங்கள் அபராதம் விதிக்கப் போகிறோம்!” என எச்சரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து தனது மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தெரிவித்ததை அடுத்து மனு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com