நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளபோது கருத்து தெரிவிக்கலாமா?

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளபோது கருத்து தெரிவிக்கலாமா?

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளபோது கருத்து தெரிவிக்கலாமா?
Published on

நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கு ஒன்று நிலுவையிலோ அல்லது விசாரணையிலோ இருக்கும் போது அது குறித்து அரசியல் கட்சியினரோ அல்லது அமைச்சர்களோ கருத்து தெரிவிப்பது சரியா என அரசியல் சாசன சட்ட அமர்வு விசாரிக்க உள்ளது.

இது குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அதை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. நீதிமன்ற வழக்குகள் குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். இதை ஆமோதித்த வழக்கறிஞர் ஃபாலி நரிமன், இதன் காரணமாகவே தனது ட்விட்டர் கணக்கை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு நடந்து கொண்டிருந்தபோது அந்நிகழ்வு அரசியல் சதி என சமாஜ்வாதி கட்சியின் ஆசம் கான் கருத்து தெரிவித்திருந்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com