இந்தியா
”தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா?” உச்சநீதிமன்றம்
”தாஜ்மஹாலை காக்க அக்கறை இல்லையா?” உச்சநீதிமன்றம்
தாஜ்மஹாலை பராமரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக கூறி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தாஜ்மஹாலை முழுமையாக பராமரிக்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட பொது நல மனு மீது நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அதிகாரிகளின் மெத்தன போக்கே தாஜ்மஹால் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம் என்று கூறிய உச்சநீதிமன்றம் தாஜ்மஹால் பாதுகாப்பு மண்டல தலைவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடது. வழக்கில் ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர், சுற்றுச்சூழல் நிலைமை குறித்து ஐஐடி கான்பூர் கள ஆய்வுகள் செய்து வருவதாகவும், அதன் அறிக்கை 4 மாதத்தில் சமர்பிக்கப்படுமென விளக்கமளித்தார்