“குளறுபடிகளால் நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது” - உச்சநீதிமன்றம்

வினாத்தாள் கசிவு, விடைத்தாள் திருத்தங்களில் மோசடி, ஆள் மாறாட்டம் என நீட் தேர்வில் நடைபெறும் குளறுபடிகள், மாணவர்களுக்கு பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு - உச்சநீதிமன்றம்
நீட் தேர்வு - உச்சநீதிமன்றம்புதிய தலைமுறை

குளறுபடிகளால் நீட் தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும்” என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வினாத்தாள் கசிவு, விடைத்தாள் திருத்தங்களில் மோசடி, ஆள் மாறாட்டம் என நீட் தேர்வில் தொடர்ந்து பல குளறுபடிகள் நடந்துவருகின்றன. இதில் சமீபத்தில் நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்னை, 67 மாணவர்கள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்pt web

சில மாணவர்கள் 719ம், 718ம் பெற்று இருக்கிறார்கள். இந்த மதிப்பெண் வாங்குவது சாத்தியமே இல்லை. ஏனெனில், நீட் தேர்வில் மைனஸ் மார்க் உண்டு. அதாவது, நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தாலும், அக்கேள்விக்கு உரிய மதிப்பெண்ணை விடவும் 1 மதிப்பெண் கூடுதலாக குறைக்கப்படும். சரியாக எழுதினால், ஒருகேள்விக்கு 4 மார்க் தரப்படும். நிலைமை அப்படியிருக்க, இந்த மாதிரியான தேர்வு முறைகளில் முழு மதிப்பெண் வாங்குவது சாத்தியம் இல்லை.

தேர்வு முடிவுகள் வெளியான பின்தான் சர்ச்சை என்றில்லை. பரிட்சைக்கு முன்பேவும் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம் என நீட் தேர்வு விவகாரம் பெரும் பிரச்னைகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது.

நீட் தேர்வு - உச்சநீதிமன்றம்
EXCLUSIVE | “நீட் தேர்வு இல்லாமலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம்!” - ஏ.கே.ராஜன்!

நாடு முழுக்க மொத்தம் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியுள்ள நிலையில், நீட் தேர்வு அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது என்று பெற்றோர்களும் கல்வியாளர்களும் வேதனை தெரிவித்தனர்.

நீட் தேர்வு - உச்சநீதிமன்றம்
தொடரும் நீட் தேர்வு குளறுபடிகள்; தேசிய தேர்வு முகமை கொடுத்த விளக்கம்.. விமர்சனங்கள் எழுவது ஏன்?

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, “இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “இத்தகைய குளறுபடிகளால் நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். இதுகுறித்து தேசிய தேர்வுகள் முகமையே பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து இது குறித்து தேசிய தாவு முகமை பதிலளிக்கையில், “இயற்பியல் பாடத்தில் சில திருத்தங்கள் செய்ததும், நேர குளறுபடி காரணமாக கருணை மதிப்பெண்கள் கொடுத்ததும்தான் மாணவர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு காரணம்” என்று கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com