இந்தியா
பான் கார்டு பெற ஆதாரை கட்டாயப்படுத்துவது ஏன்?: உச்சநீதிமன்றம்
பான் கார்டு பெற ஆதாரை கட்டாயப்படுத்துவது ஏன்?: உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி பான் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது ஏன் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பான் கார்டுகளை பெற ஆதார் எண்ணை அளிப்பது அவசியம் என மத்திய அரசு பட்ஜெட் தொடரின் போது அறிவித்தது. இந்த நிலையில் ஆதார் எண் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்ற உத்தரவையும் மீறி பான் கார்டுகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, போலி பான் கார்டுகளை பயன்படுத்தி வரி செலுத்தாமல் பலர் முறைகேடு செய்வதாகவும் இதனை தடுக்கவே அரசு ஆதாரை கட்டாயமாக்கியதாகவும் கூறினார். வாதத்தை கேட்ட உச்சநீதிமன்றம் வழக்கின் விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

