இந்தியா
பழைய ரூபாய் நோட்டை மாற்ற அவகாசம் வழங்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
பழைய ரூபாய் நோட்டை மாற்ற அவகாசம் வழங்காதது ஏன்?: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்காதது ஏன் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு மட்டும் மார்ச் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் உள்நாட்டு வாழ் இந்தியர்களுக்கு டிசம்பர் 30ம் தேதி வரை மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இவ்விவகாரத்தில் வரும் ஏப்ரல் 11ம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.